#Breaking: நிர்பயா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.!

- நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது
- டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை இரண்டாவது முறையாக ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுருந்தது. இதையடுத்து தூக்கிலிடத் தடைக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை இரண்டாவது முறையாக ஒத்திவைத்தது. மேலும் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025