தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து.
தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என கூறியுள்ளது. அக்டோபர் 4ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்து, ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், அடுத்த வாரத்திற்குள் பள்ளிகள் திறப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, நேரடி கற்பிக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. குருகுலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விடுதிகளைத் திறக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…