கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
போரட்டம்:
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
இந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு:
இந்நிலையில், ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஹோலி விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய நிலையில், ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…