கேரள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ராஜமலை பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 70 முதல் 80 பேர் வரை வசித்து வந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இன்னும் எத்தனை பேர் சேற்றுக்குள் சிக்கியுள்ளார்கள் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இருக்கும் பகுதியை இணைக்கும் பாலம் நேற்று அடித்துச் செல்லப்பட்டதால், இப்பகுதியில் மீட்பு குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளா நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காலை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…