#Breaking: நீட் , ஜேஇஇ தேர்வு.. 6 மாநில அமைச்சர்கள் வழக்கு..!

நீட் தேர்வை ஒத்திவைக்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
நடப்பாண்டு நீட் தேர்வுசெப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது.
சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ,மகாராஷ்டிரா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநில அமைச்சர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025