#BREAKING : இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி..! – மத்திய அரசு

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் டெல்டா வகை கொரோனாவைவிட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. எனவே தற்போதைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் மீறிவிட வேண்டாம் என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 23 நாடுகளில் ஓமைக்ரான் பரவ துவங்கிய நிலையில், தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025