#BREAKING: ‘Welcome, buddy!’ சந்திரயான் – 2 மற்றும் சந்திரயான் – 3 இடையே தகவல் தொடர்பு!

Chandrayaan3Mission

சந்திரயான் 2 ஆர்பிட்டர், சந்திராயன் 3 லேண்டர் இடையே வெற்றிகரமாக தகவல் தொடர்பு ஏறப்படுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், ஏற்கனவே நிலவை சுற்றி வரும் சந்திரயான் – 2 ஆர்பிட்டரோடு வெற்றிகரமாக தகவல் தொடர்பு ஏற்பட்டது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுவும், ‘Welcome, buddy!’ என சந்திராயன் 3 விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் வரவேற்றுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் – 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சந்திரயான் – 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும், அதன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. இந்த நிலையில், நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர், சந்திரயான் – 2 ஆர்பிட்டரோடு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நிலையில், வெற்றிகரமாக சந்திரயான் – 2 ஆர்பிட்டருடன், சந்திராயன் 3 லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது.

பெங்களுருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. சந்திரயான் – 2 திட்டம் தோல்விடைந்த நிலையிலும், அதன் ஆர்பிட்டர் சந்திரயான் – 3க்கு உதவி செய்கிறது. தனக்கு கிடைக்கும் தகவல்களை லேண்டர் ஆர்பிட்டருக்கு தொலைத்தொடர்பு மூலம் அனுப்பவும் பெறவும் முடியும். மேலும், திட்டமிட்டபடி சந்திரயான் – 3 லேண்டரை நிலவை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை 5.20 மணியில் இருந்து நேரலையாக ஒளிபரப்பட உள்ளது. பெங்களுருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறக்குவதற்கான நடவடிக்கை நடைபெறும். சந்திரயான் – 2 ஆர்பிட்டர் மூலமாக ரோவரிடம் இருந்து பெரும் தகவல்களை, லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பும். நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump