Brutally Attacks His Own Sister with Axe [file image]
அனந்தபூர் : சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனது சொந்த அக்காவை கோடாரியால் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் கர்லாடின்னே மண்டலத்தில் உள்ள பெனகசெர்லா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டுமனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தனது சொந்த அக்காவை மரம் வெட்டும் கோடாரியால் தாக்கி இருக்கிறார். இதனால், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறிது.
அந்த வீடியோவில், “ஜிலானி எனப்படும் நபர் தனது சொந்த அக்காவான மகபூபியை கொடூரமாக மரம் வெட்டும் கோடாரியால் தங்குவார். அதை அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் அவரை தடுக்க முயன்ற போதும், ஜிலானி பல முறை தாக்குவார். மேலும், மகபூபியும் அந்த கோடரியை தடுக்க முயற்சி செய்வார். ஆனாலும், பல முறை கால்களை பார்த்தும், தலையை பார்த்தும் ஜிலானி தாக்குவார்”.
இதனால், பலத்த காயம் ஏற்பட்ட மகபூபியை அனந்தபூர் பொது மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அனந்தபூர் காவல் துறையினர் கோடாரியை கொண்டு தாக்கிய ஜிலானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், கடந்த சில மாதங்களாகவே மகபூபி வசித்து வந்த வீடு தொடர்பாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், ஜிலானி தனது அக்காவான மகபூபியை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டி வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ஜிலானி நேற்று செவ்வாய்க்கிழமை அன்று கோடாரியை வைத்து தனது அக்காவை விரட்டி விரட்டி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதோடு மிகவும் வைரலாகியும் வருகிறது. மேலும், சொந்த அக்காவையே இப்படி கொடூரமாக தாக்கிய சம்பவம் பெனகசெர்லா கிராமத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…