சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில் தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ளதும்.இத்தாலியில் கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் , கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5,080 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொடூரன் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் மத்திய ,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர்.மேலும் 82 பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடைவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா , வங்கதேசம் இடையே பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வருகின்ற ஏப்ரல் 15-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த போக்குவரத்தை இருநாட்டு அரசும் நிறுத்தியுள்ளது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…