நவம்பர் மாதம் நடைபெறவுள்ள NDA தேர்வுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்ப்பது தொடர்பாக ஏற்கனவே அரசாங்கம் நீதிமன்றத்துக்கு உறுதி அளித்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு அகாடமியின் மூலமாக இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பெண்களை சேர்ப்பதற்கான உறுதிமொழியையும் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது.
இருப்பினும் பெண் தேர்வாளர்கள் இந்த தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதி குறித்த அறிவிப்பு, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் நவம்பர் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள NDA தேர்வுகளில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அவர்களது நம்பிக்கையை உடைத்து ஒரு வருடம் வரை இந்தத் தேர்வை ஒத்தி வைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுக்கு முந்தைய தேர்வு பெண்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…