cbse results Tom [Image-Twitter/@CBSE]
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடு, தகவல் உண்மையில்லை என சி.பி.எஸ்.இ விளக்கம்.
இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளை, கிட்டத்தட்ட 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதுபோன்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்த சமயத்தில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான சரியான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வாரியம் ஒரே நாளில் வெளியிடுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என இணையத்தில் வெளியான அறிக்கை போலியானது என CBSE ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…