மணிப்பூர் விவகாரத்தை இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு சம்மதம்..?

மணிப்பூர் விவகாரத்தை இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கி சில மணி நேரங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், 12 மணி தொடங்கிய மாநிலங்களவை நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும், பிரதமர் இரு அவைக்கும் வந்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இரு அவைகளும் 2 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் காரணமாக, இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தை இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025