மோடிக்கு யாரு better அடிமை..? – அமைச்சர் உதயநிதி

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே காப்பாற்ற முடியாது என அமைச்சர் உதயநிதி பேட்டி.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் விவகாரத்தில் 50 நாட்களாக வாய் திறக்காமல் இருந்த பிரதமர் மோடி, வேறு வழியில்லாமல் பேசியுள்ளார்.
பாஜகவின் NDA கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து யார் போவார்கள்? பிரதமர் மோடியின் அடிமையாக இருப்பதால் இபிஎஸ் கூட்டத்திற்கு சென்றுள்ளார். யார் சிறந்த அடிமை என ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவருக்குள் போட்டி நடக்கிறது. அதில் ஈபிஎஸ் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக மிகுந்த பயத்தில் உள்ளது. இந்த கூட்டணியை பொறுத்தவரையில், யார் பிரதமராவார்கள் என்பதைவிட, யார் பிரதமராக கூடாது என்பதை தான் நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.