சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ட்டது.அதன் பின்னர் கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுருத்தி வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. கொரோனாவை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார்.
unknown nodeunknown nodeஇவரை தொடர்ந்து நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பால் சிகிக்சை பெற்றுவந்த 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த மூதாட்டி உயிரிழப்பை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் இந்தியாவில் 85 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் உயிரிழந்த குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.4,00,000 அறிவித்துள்ளது.