சவால்களை ஜனநாயக முறையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் – பிரதமர்!

சவால்களை ஜனநாயக முறையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடைபெறும் 82 வது சபாநாயகர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஜனநாயகம் என்பது இந்தியாவின் அமைப்பு மட்டுமல்ல, அது இந்தியாவில் இயல்பான ஒன்று.
வரும் ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே அனைவரும் ஜனநாயக முறையில் ஒற்றுமையாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வடகிழக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நிறுத்தப்பட்ட பெரிய வளர்ச்சி திட்டங்களை மீண்டும் நிறைவேற்றி முடிப்பதற்கும் ஜனநாயகம் தான் உதவும்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது இந்தியா வெற்றி பெறுவதற்கும் அனைவரும் ஜனநாயகத்தின் படி ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டது தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா தற்போது 110 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக தோன்றியது தற்பொழுது சாத்தியமாகி உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025