டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி இந்திய அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றியுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.
இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியயோர் பாஜக ஆட்சியமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் இருவருமே , முன்னர் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்த தலைவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், வருங்கால ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த 2019ஆம் ஆண்டு அவரது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த டிவீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதில், இந்தியாவின் மதிப்புமிக்க அமைப்புகளை மோடி திட்டமிட்டு அழித்துவிட்டார். பாஜக ஆட்சியில் மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்புகளை கூட பாஜக விட்டுவைக்கவில்லை. என பதிவிட்டு இருந்தார். இதனை டிவிட்டரில் மறுபதிவு செய்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…