சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார் 7 ஆண்டுகள் வரை ஆய்வு பணியை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே முதல் முறையாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியிருந்தது. தரையிறங்குவதில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் மற்றும் தரவுகளை நல்ல முறையில் அனுப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பபடும் விண்கலத்தின் ஆய்வு பணிக்காக பொருத்தப்பட்டிருந்த ஆர்பிட்டார் எனும் நவீன கருவி மற்றும் அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சிந்தடிக், கேமராக்கள் ஆகிய எட்டு விதமான ஆய்வு கருவிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஓராண்டில் மட்டுமே சந்திராயன் 2 விண்கலம் 4 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட முறை நிலவை சுற்றி வந்து பல்வேறு தகவல்களை சேகரித்து தந்துள்ளது. இந்நிலையில் சந்திராயநில உள்ள ஆர்பிட்டர் எனும் நவீன கருவியின் ஆய்வுக் காலம் ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது அதில் எரிபொருள் அதிக அளவு இருப்பதால் இது ஏழு ஆண்டுகள் வரையிலும் தனது ஆய்வு பணியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…