காயமடைந்தவர்களை பார்வையிட வந்த முதல்வர் பினராயி விஜயன்.!

“வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் பார்வையிட மருத்துவ கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025