முதலமைச்சர் விவகாரம்! ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் சித்தராமையா.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா. கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார் சித்தராமையா.
புதிதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு வருகை தந்துள்ளார். கர்நாடகா முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் இழுபறி பிரச்சனையை தீர்த்து வைக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் ஆகியோருடன் இன்று அடுத்தடுத்து தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடக போட்டியில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று ராகுல் காந்தியை சந்திக்கிறார் சித்தராமையா. முதலமைச்சர் போட்டியில் உள்ள இரு தலைவர்களும் ராகுலை சந்தித்து பேசும் நிலையில், முதல்வர் யார் என்பது இன்று இறுதியாக வாய்ப்பு உள்ளது.