12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் சிலர் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி வருவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவும் அதிகாரப்பூர்வமாக மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் சிபிஎஸ்இ அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்படும்.
ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நிலைமை குறித்து மறுஆய்வு செய்யப்படும் எனவும் தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவர்களுக்கு 15 நாள்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…