CoachingCenters [File Image]
என்ஓசி செயல்படும் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லாமல் செயல்படும் அனைத்து பயிற்சி மையங்களையும் மூடமுனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மையங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் 15 அன்று முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்கள் காயம் அடைந்தனர். அதன்பிறகு நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. இந்த விவகாரத்தில் டெல்லியில் இயங்கும் 583 பயிற்சி நிறுவனங்களில், 67 நிறுவனங்களுக்கு மட்டுமே என்ஓசி உள்ளதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன்பின், தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா தலைமையிலான அமர்வு, டெல்லி மாஸ்டர் பிளான்-2021 (MPD-2021) இன் கீழ், பயிற்சி மையங்கள் கட்டுப்படவில்லை என்றால் அது மூடப்படும் என்று கூறியுள்ளது. எனவே, என்ஓசி இல்லாத பயிற்சி மையங்களை மூடுமாறு எம்சிடி மற்றும் டெல்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், 30 நாட்களுக்குள் இந்த உத்தரவை நிறைவேற்ற முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (எம்சிடி) அனைத்து உதவிகளையும் வழங்குமாறு காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…