ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையின் கீழ் நடந்த மோதலில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Pahalgam Attack

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட பாதுகாப்பு படை நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) இணைந்து நடத்திய இந்த என்கவுண்டரில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான சுலேமான் சாஹா, அபு ஹம்ஸா மற்றும் யாசிர் என அடையாளம் காணப்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஸ்ரீநகர் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து சுமார் 17 கையெறி குண்டுகள், ஒரு M4 கார்பைன் மற்றும் இரண்டு AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்