நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என கூறியது.
மேலும் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது. இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்பது மனுக்கள் இந்த வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.மீதம் உள்ள ஒன்பது மனுக்கள் புதியவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி நிலம் தொடர்பாக முன்பு நடைபெற்ற வழக்கின் மனுதாரர்களில் ஒருவர் எம்.சித்திக். அவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அஷ்ஹத் ரஷிதி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2-ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
மேலும் சில இஸ்லாமிய அமைப்பின் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு முன்னர் விசாரணைக்கு வரவுள்ளது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…