டெல்லி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் ‘அந்த’ ஒரு தொகுதி எது தெரியுமா?

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பத்லி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Delhi election result 2025 - Rahul gandhi - Devender Yadav

டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. கடந்த 2 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி எதிர்நோக்கியது.

ஆனால், தற்போது வரையில் வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் சுமார் 25 வருடங்களுக்கு பிறகு பாஜக மீண்டும் தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையை அக்கட்சிக்கு தருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளில் பாஜக 42 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி 27 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. ஆம் ஆத்மியில் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  மற்றும் தற்போதைய முதலமைச்சர் அதிஷி என இருவருமே பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் 15 வருடங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத சூழலில் இருந்தன. இப்படியான சூழலில் இந்த முறை ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.  டெல்லியில் 5வது தொகுதியான பத்லி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்தர் யாதவ் மட்டும் முன்னிலை பெற்று வருகிறார் என் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்