காங்கிரஸ் இதுவரை என்னை 91 முறை இழிவுப்படுத்தி உள்ளது – பிரதமர் மோடி பேச்சு

Narendra Modi

காங்கிரஸ் எத்தனை முறை இழிவுப்படுத்தினாலும் கர்நாடக மக்களுக்காக நான் பாடுபடுவேன் என பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், பரப்புரை தீவிரமடைந்துள்ளது.

அந்தவகையில், பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். கர்நாடகாவில் பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மீண்டும் தன்னை இழிவுபடுத்த தொடங்கியுள்ளது. காங்கிரஸ் இதுவரை என்னை 91 முறை இழிவுப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் அவதூறாக பேசும்போது அதை நான் பரிசாகவே ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் ஒவ்வொரு முறை என்னை இழிவுப்படுத்தும் போதும் அது தகர்க்கப்படுகிறது. காங்கிரஸ் எத்தனை முறை இழிவுப்படுத்தினாலும் கர்நாடக மக்களுக்காக நான் பாடுபடுவேன் என கூறினார்.

மேலும், கர்நாடகா தேர்தல் வெறும் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல, நாட்டிலே நம்பர் 1 மாநிலமாக மாற்றும் தேர்தல். பாஜக ஆட்சியை மீண்டும் ஏற்க கர்நாடக மக்கள் தயாராகியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் மாநில விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. காங்கிரஸின் முறைகேடுகளுக்கு வாக்குகள் மூலம் பதிலளிக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்