இதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஏடிஎம் மிஷின் போல தானியங்கி மதுபான எந்திரம் நிறுவ உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள், தானியங்கி தொழில்நுட்ப இயந்திரம் மூலம் மது வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மதுபான தானியங்கி இயந்திரத்திற்கு கண்டன்னகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.