16 ஓட்டு வெற்றி… வாக்கு எண்ணும் மையத்திற்குள் பாஜக எம்பி.! டி.கே.சிவகுமார் கடும் குற்றசாட்டு.!

வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக எம்.பி அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றாலும். ஒரு தொகுதியில் நள்ளிரவு வரை தேர்தல் முடிவு இழுபறியாகி சென்று முதலில் காங்கிரஸ் வெற்றி என அறிவிக்கப்பட்டு பின்னர் பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஜெயா நகர் தொகுதியில் பாஜகவின் சி.கே.ராமமூர்த்தியும், காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டியும் போட்டி போட்டனர். இதில் ஆரம்பத்தில் இருந்து இழுபறியாக சென்று கொண்டிருந்த நிலையில் முன்னிலை மாறி மாறி வந்து இடையில் சுமார் 290 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி என அறிவிக்கப்பட்டு பின்னர் பாஜகவினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என கேட்கவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
அந்த சமயம் ஜெயா நகர் பகுதியில் டி.கே.சிவகுமார் வாக்கு எண்ணும் மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரான சூழல் நிலவியது. இதுபற்றி சிவகுமார் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா அனுமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு தான் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.