கேரளாவில் இன்று 30,196 பேருக்கு கொரோனா தொற்று..!

கேரள மாநிலத்தில் இன்று 30,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 30,196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 28,617 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 181 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தற்போது கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40,21,456 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,001 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 480 பேர் உள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025