கொரோனா நோயாளியின் மரணம் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் வரை தடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஒரு கொரோனாநோயாளியின் மரணம் குறித்து ஆத்திரமடைந்த குடும்பத்தின் உறவினர்கள் கடந்த புதன்கிழமை இரவு கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பெலகாவி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தீ வைத்தனர்.
அன்று உயிரிழந்த 55 வயதான நபரின் உறவினர்கள் கல்லை எறிந்து மருத்துவமனையை சேதப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையின்படி, உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்று ஏபிஎம்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் தீயை அணைக்கும் வரை தடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு கான்ஸ்டபிளும் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பெலகாவி டாக்டர் தியாகராஜன் கூறுகையில் , “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நோயாளியின் உறவினர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தக்கூடாது. இந்த காலங்களில் எங்கள் மருத்துவ ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நாங்கள் புகார் பதிவு செய்துள்ளோம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் 108 ஆம்புலன்சில் குற்றவாளிகள் வாகனத்திற்கு தீ வைத்தபோது யாரும் இல்லை. தாக்குதல் நடத்திய கும்பலில் 30 முதல் 40 பேர் இருந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாங்கள் மருத்துவமனையைச் சுற்றி அதிகமான பொலிஸ் படையை குவித்தோம் என்று அவர் கூறினார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…