கேரளாவில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

கேரளாவில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியான 42 பேரில் 17 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் 21 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு தற்போது வரை 216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இன்று கொரோனா வைரஸில் இருந்து 2 குணமடைந்த நிலையில், மொத்தம் 512 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.