கொரோனா வைரஸின் 2-வது அலை பரவல், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்கப்படுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல், கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸால் பாக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அவர்கள், கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை குறித்து கூறுகையில், தேவை நிலைமைகளை மேம்படுத்துதல், அரசாங்கத்தின் முதலீட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள், வளர்ச்சி வாய்ப்புகளுக்கு தலைகீழாக அமைகின்றன. இருப்பினும் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்கப்படுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…