மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்.இவரது மனைவி பிரனாளி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் மும்பை அந்தேரில் ஒன்றாக வேலை செய்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மற்றொரு பெண்ணுடன் சுனிலுக்கு தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் இதில் ஆத்திரமடைந்த பிரனாளி கணவரை கொல்ல முடிவு செய்தார். சுனில் படுப்பதற்காக அறைக்கு சென்று விட்டார். பின்னர் பிரனாளி தண்ணீர் குடிப்பதாக கிச்சனுக்கு சென்று கத்தி உடன் வந்துள்ளார். சுனில் நல்ல தூங்கிய நேரத்தில் அவரது வயிற்றுப் பகுதியில் ஒரு சரமாரியாக குத்தியுள்ளார்.
பிறகு பெற்றோரிடம் சென்று தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் பதினொரு முறை குத்தியதுதெரிய வந்தது.
ஒருவர் தன்னைத்தானே 11 முறை குத்திக்கொண்டு தற்கொலை செய்ய முடியாது என போலீசார் நினைத்துக் கொண்டு பின்னர் தொடர்ந்து பிரனாளியிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…