மகாராஷ்டிராவில் வருகின்ற அக்டோபர் 22 முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், அவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றினால், சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் அக்டோபர் 22 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 4 முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்புகளும் மீண்டும் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…