காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசு மசோதாவை கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றியது.
இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால், காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காஷ்மீரில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட காஷ்மீருக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், இன்று கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சிபிஎம் தலைவரான சீதாராம் யெச்சூரியையும், சிபிஐ தலைவரான டி.ராஜாவும் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்றனர். அவர்கள் விமான நிலையத்திலேயே பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதே போல, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தும், காஷ்மீருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025