தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயம்..!

Default Image

காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ஜைனாபோரா கிராமத்தின் கிரால் செக் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது இன்று காலை நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர்  காயமடைந்தார்.

இந்த தாக்குதலில் 178 பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அஜய் குமார் காயமடைந்தார். காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து, படையினரும் பதிலடி கொடுத்தனர். தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்