ஊரடங்கை நீங்கள் ON/OFF செய்ய அது சுவிட்ச் இல்லை -ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஊரடங்கு உத்திரவு தளர்த்துவதை பற்றி மத்திய அரசுக்கு தனது கருத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .மத்திய அரசு ஊரடங்கை மே 17 க்கு பிறகு தளர்த்துவதை பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் .
ஊரடங்கை தளர்த்தியும் மீண்டும் தொடர்வதற்கு அது சுவிட்ச் இல்லை என்றும் ஊரடங்கை தளர்த்துவதற்கு முன்னர் அது பற்றி தெளிவான திட்டமிடுதல் இருக்க வேண்டும் . இதற்கு மாநில, மத்திய அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படும் ”என்று ராகுல் வீடியோ கான்ஃபிரன்சிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.