காஷ்மீரில் 13 மாவட்டங்களில் ஊரடங்கு நீக்கம்..!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா, ஷோபியன் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் 3 லட்சித்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிறகு அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்ட ஊரடங்கு காரணமாக தற்போது இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச், ராஜோரி, உதம்பூர், அனந்த்நாக், பண்டிபோரா, பாரமுல்லா, புட்கம், காண்டர்பால், புல்வாமா மற்றும் ஷோபியன் ஆகிய 13 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
இந்த மாவட்டங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்படலாம் எனவும் இருப்பினும், தினமும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025