மத்திய அரசானது, கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பானது 2லட்சத்து 50ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதனையடுத்து,நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,பொதுநலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதாவது,நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மருந்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.மேலும்,இந்த உத்தரவானது வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறியுள்ளது.இந்த உத்தரவினால்,தேவைக்கு ஏற்ற அளவில் ரெம்டெசிவெர் கிடைக்கும் என்றும்,இதன்மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு குறையும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக,உள்நாட்டு தேவை கருதி,ரெம்டெசிவெர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…