நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி …!

குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் பட்டியலின குடும்பத்தில் பிறந்த இவர், மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி குரல் எழுப்பி வருகிறார். மேலும் உனாவில் இவர் நடத்திய பட்டியலின மக்களுக்கு ஆதரவான போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அசாம் போலீசார் திடீரென்று ஜிக்னேஷ் மேவானியை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இவரை கைது செய்ததற்கான காரணம் என்பது என்ன இன்னும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக அசாமில் ஜிக்னேஷ் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025