கோவிஷீல்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகள் இந்தியாவில் வேண்டாம்… DCGI புதிய உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை: கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் (DCGI) முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளில் பிரதானமாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது உலகளவில் பெரும் சர்ச்சையானது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து இதே ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரிக்கும் கேன்சர் மருந்து குறித்து முக்கிய தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் DCGI தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கேன்சர் நோயாளிகளின் கீமோதெரபி சிகிச்சைக்கு அளிக்கும் ஓலாபாரிப் (Olaparib) மருந்தை DCGI ஆய்வுக்கு உட்படுத்தியது.  ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளை அடுத்து, தற்போது மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில், ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை திரும்ப பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிப்பட்டுள்ளது.

மே 16 அன்று DCGI குழுமத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பிய தகவலின்படி, அஸ்ட்ராஜெனெகா ஃபார்மா இந்தியா லிமிடெட் நிறுவனம், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மற்ற சில புற்றுநோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்படும் ஓலாபாரிப் (Olaparib)100மிகி மற்றும் 150மிகி மாத்திரைகளை திரும்ப பெறுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தும், குறிப்பிட்ட கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி பல்வேறு கட்ட சிகிச்சையில் ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை தொடர்ந்து அளிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, விரைவாக, ஓலாபாரிப் (Olaparib) 100mg மற்றும் 150mg மாத்திரைகளை சந்தைப்படுத்துதலை திரும்பப்பெற வேண்டும் என அனைத்து உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தி DCGI சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த ஓலாபாரிப் (Olaparib) 100 mg மற்றும் 150 mg மாத்திரைகள் கடந்த ஆகஸ்ட் 13, 2018 அன்று கருப்பை புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக DCGI ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

20 minutes ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

22 minutes ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

43 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 hour ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

1 hour ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

2 hours ago