சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்து, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் மீட்கப்பட்டதால், சந்தேகம் வலித்தது. பின்னர் தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது போலவும், அதில் அவர் நிற்பதுபோன்ற காட்சிகளும் இடம்பெற்றன. இதனையடுத்து, தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தாகிர் உசைன் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணை முடிந்து அதிலிருந்து அவர் விடுதலையாகும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…