காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டி .கே சிவகுமார் சட்டவிரோதமாக பணமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டார். கைது செய்ய ப்பட்ட டி .கே சிவகுமார் திஹார் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.இவரது ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி சிவகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது. 50 நாள்கள் சிறையில் இருந்த பின் ஜாமினில் வெளியான சிவகுமார் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் தனது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு தொண்டர்கள் மற்றும் ஆதரவு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நடனக்கலைஞர், மேளதாளங்கள் என பெங்களூர் விமான பகுதியிலேயே உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதில் குறிப்பாக 20 அடி கொண்ட ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்தது.
100 கிலோ எடை கொண்ட இந்த ஆப்பிள் மாலை லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கிரேன் உதவியுடன் ஆப்பிளை சிவகுமாருக்கு அணிவித்து தொண்டர்கள் தங்கள் வரவேற்பறை வெளிப்படுத்தின.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…