‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!

தன் காதலியை பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் வைத்து எடுத்துவந்து சிக்கிக்கொண்ட மாணவன்.

sneak her into boys hostel

சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை  ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் அடைத்து வைத்து கொண்டு செல்ல முயன்ற நபர் வசமாக சிக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி (PRO), ‘மாணவர்கள் “குறும்புத்தனமாக நடந்து கொண்டனர்” என்றும் அது பெரிய விஷயமல்ல. யார் அந்த பெண்> என்று விசாரிக்கையில் அந்த மாணவரின் காதலி என்றும் தெரிய வந்துள்ளது .

இந்த காணொளியைப் பார்த்து பலர் அதிர்ச்சியுடனும், கேலியுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில், காலேஜ் ஹாஸ்டலுக்கு ஒரு மாணவர், பெரிய சூட்கேசுடன் வருகிறார். திடீரென அவரை நிறுத்தி, சூட்கேசை சோதனை செய்கின்றனர் வார்டன்கள். சூட்கேசை திறந்தால், உள்ளே இருந்து ஒரு பெண், வெளியே வருகிறார். எல்லோருக்கும் ஷாக் தான்.

காதலியை யாருக்கும் தெரியாமல், பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் கூட்டிச் செல்ல, இப்படி ஒரு பிளான். ‘என்னடா இப்படி இறங்கிட்டீங்க’ என நெட்டிசன்கள் அந்த ஜோடியை கலாய்த்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்