வாகனங்களில் முன்பக்க பயணிகளின் இருக்கைக்கு ஏர்பேக்குகள் கட்டாயம் என்பது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமுல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் வாகன போக்குவரத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொழில் சார்ந்து இடம்பெயர்தல்.வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பல மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றனர் .ஆனால் அவை யாதிலும் பாதுகாப்பு உறுதி இல்லை .
சாலைகளில் தற்போது விபத்துகள் நிகழ்வது அதகமாவதுடன்,அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்பும் அதிகமாகி தான் வருகிறது.எனவே பயணிகளின் பாதுகாப்பை கருதி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கார்களில் முன்பக்க பயணிகள் இருக்கைக்கு ஏர்பேக்குகள் பொருத்துவதை கட்டாயமாக்குமாறு சட்ட அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை கூறியிருந்தது.இதுகுறித்து கடந்தாண்டு டிசம்பரில் பொதுமக்கள் கருத்தையும் அறிய அரசாங்கம் கருத்து கணிப்பு நடத்தியதை தொடர்ந்து சட்ட அமைச்சகம் முன் இருக்கைகளில் ஏர்பேக் கட்டாயம் என்ற திட்டத்தை ஏற்று கொண்டது .
அதன்படி தற்போதுள்ள மாடல்களில் ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற புது விதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செயல்படுத்தப்படும் என்றும் , ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வாகனங்களில் முன்பக்க பயணிகளின் இருக்கைக்கு ஏர்பேக்குகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை விரைவில் சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…