வெப்ப அலை எங்கு எப்போது வீச போகிறது தெரியுமா.? வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

வரும் நாட்களில் 9 மாநிலங்கள் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெயில்
இன்று மற்றும் நாளை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை நிலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் தேதி கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிராவிழும், 12 , 13 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் மற்றும் மேற்கு ராஜஸ்தான் பகுதிகளிலும், 12 முதல் 14 வரை மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் 13 மற்றும் 14 தேதிகளில் விதர்பா ஆகிய பகுதிகளிலும் வெப்ப அலை அதிகரிக்கும்.
மேலும், 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பீகார், ஒடிசா மற்றும் கங்கை மேற்கு வங்காளம் மற்றும் மே 14 முதல் 16 வரை கடலோர ஆந்திரா & யானம் ஆகிய பகுதிகளிலும் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும். மேலும், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, அடுத்த 2 நாட்களில் கொங்கனில் வெப்பம் மற்றும் அசௌகரியமான வானிலை மிக அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மழை
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மே 12 அன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திரிபுரா மற்றும் மிசோரம் பகுதிகளில் மே 13 ஆம் தேதி கனமழையுடன் பெய்யக்கூடும் . மே 14 ஆம் தேதி நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் தெற்கு அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.