நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட, இந்தியாவை சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் வசித்து வருபவர் டாக்டர் கவுரவ் சர்மா, 33. இவர் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரை சேர்ந்தவர் ஆவார். இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தினருடன் நியூசிலாந்து சென்றவர். நியூசிலாந்தில் படித்து, டாக்டர் பட்டம் பெற்ற கவுரவ் சர்மா, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஹாமில்டன் நகரில், டாக்டராக சேவையாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான தொழிலாளர் கட்சி சார்பில்,ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய கட்சி வேட்பாளர் டிம் மசிண்டோவை விட, 4,425 ஓட்டுகள் அதிகம் பெற்று, கவுரவ் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து கவுரவ் சர்மா கூறும்போது, ”இந்த வெற்றியின் மூலம், மக்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன்,” என்றார். இவரது இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ஹிமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ”நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம், நம் நாட்டிற்கும், எங்கள் மாநிலத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…