மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கண்களை பெறுவீர்கள் – பாஜக அமைச்சர் பேச்சு.!

Vijaykumar Gavit - Aishwarya Rai

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர், தினமும் மீன் சாப்பிட்டு வந்தால், நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்களுக்கு இணையாக, கண்களை நீங்கள் பெறலாம் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

வடக்கு மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சி விழாவில் பேசிய அம்மாநில பழங்குடியின அமைச்சர் விஜய்குமார் காவித், தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு மிருதுவான சருமம் உருவாகி கண்கள் மிளிரும். இந்நிலையில், தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்களை பெறுவீர்கள்.

ஐஸ்வர்யா ராய் பெங்களூரு அருகே கடலோர நகரத்தில் வசித்து வந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் மீன் சாப்பிடுவது வழக்கம், அதனால் அவள் கண்களும் தோலும் அழகாக இருக்கும். தினமும் மீன் சாப்பிட்டால் உங்கள் கண்கள் ஐஸ்வர்யா போல் அழகாக இருக்கும்.

அப்படி செய்தல், யாரை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம் என சர்ச்சைக்குரிய, அதிர்ச்சியான கருத்தை தெரிவித்துள்ளார்.  விஜயகுமார் காவித் தெரிவித்த இந்த கருத்துகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்