9 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது.
உத்தரபிரதேசத்தின் சீதாபூரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், 4-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு ஆபாச வீடியோ கிளிப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, தனது மகள் 9 வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் சித்தாப்பூர் கோண்ட்லாமாவ் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு ஆபாச வீடியோவை காட்டி உள்ளார். சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது உடனடியாக அவர் அறையின் உள்ளே இருந்து கதவை பூட்டியுள்ளார்.
பின் வீடு திருப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறினார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதற்கு முன்பும் இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…