கர்நாடகாவில் பாதித்த மாவட்டங்களில் முதல்வர எடியூரப்பா இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடகாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மாத தொடக்கத்திலிருந்து கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், கனமழை விடாமல் பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அதன்படி, இன்று எடியூரப்பா மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக விமான நிலையத்தில் வைத்தே பெலகாவி மற்றும் தார்வார் மாவட்ட மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தவுள்ளார். அந்த 2 மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
அதன் பின் ராணுவத்தின் ஹெலிகாப்டர் மூலம் மழையால் பாதித்த 3 மாவட்டங்களை மாவட்டங்களை மேற்பார்வையிடுகிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…