கொரோனா தீவிரமாக பரவ தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்த்து,தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,தேர்தல் ஆணையம் தாங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.
கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும்,தேர்தல் ஆணையம் மீது ஏன் கொலைப்பழி சுமத்தக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம்,தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தது.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அதில்,”எங்களது கருத்துகளை சரியான முறையில் எடுத்து சொல்ல வாய்ப்பு தராமல்,சென்னை உயர்நீதிமன்றம் எங்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது” என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இதற்கு பதிலளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், “தவறுகளை திருத்திக்கொள்ளவதற்காகவே நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன.இதைத்தவிர,வேறு எந்தவித உள்நோக்கத்துடனும் உயர்நீதிமன்றம் கருத்து கூறவில்லை.எனவே,தேர்தல் ஆணையம் சரியான பாடங்களை கற்றுக்கொண்டு தாங்கள் செய்த தவறை சரி செய்ய வேண்டும்.இருப்பினும்,கொரோனா பேரிடர் காலத்தில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன?”, என்றுக் கூறியுள்ளனர்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…